பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னை ராஜனத்தினம் மைதானத்தில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இதற்கு திமுக நாடாளுமன்ற உருப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்கூறியிருப்பதாவது, “பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு.
தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு. செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.




