இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட கொலீஜியம் குழுக் கூட்டம் செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கூ பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி குஜராத் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகா்வால், டெல்லி உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாய மற்றும் தெலங்கானா உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அபரேஷ் குமாா் சிங் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலீஜியத்திஒன் பரிந்துரையை ஏற்று மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் விரைவில் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை (தலைமை நீதிபதி உட்பட) 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பதவி உயர்வுகளில் ஒரு பெண் நீதிபதியும் அடங்குவதால், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.




