உசிலம்பட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்றுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது.
மதுரை உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி சாலையில் பட்டியலின மக்கள் 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் அசுவமா நதி பாதை வழியாக பள்ளி மற்றும் வேலைக்கு சென்று வந்தனர்.
ஒத்தப்பட்டி, வில்லாணி, வி.பெருமாள்பட்டி, மூப்பபட்டி, புதுநகர் என ஐந்து கிராம விவசாயிகளும் இந்த பாதையை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் சென்று வந்த பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து குப்பையை கொட்டியுள்ள சூழலில், பள்ளிக்கு செல்ல வழி இல்லாமல் மாணவ மாணவிகளும் , வேலைக்கு செல்ல பாதை இல்லாமல் இப்பகுதி மக்களும் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்து பட்டியலின மாணவ மாணவிகள் சென்று வர உரிய பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சௌம்யா.மோ







