பாகிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 6.50 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.680 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.263 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே நேற்று மதியம் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை, வணிக நிறுவனங்களையும் விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.







