வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அஸ்வின்’ஸ் திரைப்படம் திகிலை கிளப்பியதா இல்லையா… வாங்க பார்க்கலாம்…
லண்டனில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்த விமலா ராமன் அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு அவரும் தனது உயிரை மாய்த்து கொள்கிறார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை உயிரிழந்த எந்த உடலும் கிடைக்கவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறது. அதனால் இதை பற்றிய முழு விபரத்தையும் ஒரு வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அதன்பிறகு அங்கு நடக்கும் அமானுஷிய விஷயங்கள் என்ன என்ன? அங்கு நடந்த கொலைகளுக்கான பின்னணி என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.
படம் ஆரம்பமான முதல் அரை மணி நேரம் பார்வையாளர்களை மிரள வைக்கிறது. முதல் பாதி திகில் என்றால். இரண்டாம் பாதி திகில் கலந்த கருத்துகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த படம் புராணக்கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஹாரர் என்றால் ஹாலிவுட் படங்களில் இருப்பது போன்ற விஷூவல், மியூசிக் எல்லாம் தமிழ் படங்களில் மிஸ் ஆகும். ஆனால் இந்த படத்தில் இசை, எடிட்டிங், காட்சிகள், நடிப்பு என எதையும் குறை சொல்ல முடியாது.
தனக்கான கதையை தேர்தெடுத்து நடிப்பதில் வசந்த் ரவி கில்லாடி என்றே சொல்லலாம். அதுபோல தான் இந்த படமும். பயம் கலந்த தத்ரூபமான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் வசந்த் ரவி. வசந்த் ரவிக்கு நண்பர்களாக வரும் சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் அவர்களும் மாஸ் காட்டுகிறார்கள். அதே போல் விமலா ராமனின் நடிப்பும் அட்டகாசம். படத்தில் இதை தாண்டி இசையை பற்றி பேசியே ஆக வேண்டும். இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் விஜய் சித்தார்த் இயக்குநர் தருண் தேஜாவின் காலேஜ் மேட். இசையமைப்பாளருக்கு முதல் படம் என்று சொல்லவே முடியல அப்படி ஒரு கைவண்ணத்தை காட்டியுள்ளார். இசை படத்திற்கு பெரிய பக்கபலம்.
ஆவாராம். சவுண்ட் இன்ஜினியரிங்கில் டாக்ரேட் பட்டம் வென்று இருக்கும் இயக்குநர் தருண் தேஜா, இப்படம் மூலம் தமிழ் ஆடியன்சையும் வென்றுவிடுவார். இறுதியில் காட்சியில் உள்ள கருத்து(உனக்குள்ள இருக்குற மிருகத்த நீ தான் காண்ட்ரோல் பண்ணனும்) படத்தை எங்கையோ கொண்டுசெல்கிறது. மொத்தத்தில் தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ்க்குகொடுக்கப்படும் கிப்ட் பயம் மட்டும்தான்.
- சுஷ்மா சுரேஷ் , நியூஸ் 7 தமிழ்










