2026 ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணி வாங்கியது.
இதனிடையே, வங்கதேசத்தில் இந்து மதத்துக்கு எதிராக நிகழும் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதத்தில் முஸ்தபிசுர் ரகுமானை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்க பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிசிசிஐ கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணி விடுவித்தது.
இதனைக் கண்டித்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம், வரும் டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை என்றும் ஐபில் போட்டியை ஒளிபரப்புவதை நாட்டில் தடைசெய்கிறோம் என்றும் அறிவித்திருந்தது. இந்த நிலையில், வங்காளதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டில் அரசியல் கலக்கக்கூடாது என வங்கதேசத்தில் புதிதாக அமைந்துள்ள பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.







