இந்தியாவின் பெருமை சந்திரயான்-3 : வெற்றிப்பாதையை நோக்கி….

இந்தியாவின் பெருமையாக கொண்டாடப்படும் சந்திரயான்-3 விண்கலம், கடந்த 41 நாட்களாக மேற்கொண்ட பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்…. ஜூலை 13 : சந்திரயான் – 3 திட்டத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் தொடங்கியது…

இந்தியாவின் பெருமையாக கொண்டாடப்படும் சந்திரயான்-3 விண்கலம், கடந்த 41 நாட்களாக மேற்கொண்ட பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம்….

  • ஜூலை 13 : சந்திரயான் – 3 திட்டத்துக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் தொடங்கியது
  • ஜூலை 14 : எல்விஎம் -3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

  • ஜூலை 15 : குறைந்தபட்சம் 173 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 41,762 கி.மீ. தொலைவு கொண்ட புவி வட்டப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.
  • ஜூலை 17 : விண்கலம் பயணிக்கும் புவி வட்டப் பாதையின் தொலைவு 41,603 கி.மீ. x 226 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.
  • ஜூலை 25 : சந்திரயான்-3 சுற்றுப் பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 236 கி.மீ மற்றும் அதிகபட்சம் 1,27,603 கி.மீ தொலைவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது.

  • ஆகஸ்ட் 1 : புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி புதிய பயணத்தைத் தொடங்கியது சந்திரயான் 3.
  • ஆகஸ்ட் 5 : மைல்கல் நிகழ்வாக நிலவின் ஈா்ப்பு விசைக்குள் நுழைந்த சந்திரயான்-3 விண்கலம், குறைந்தபட்சம் 164 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 18,074 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.
  • ஆகஸ்ட் 6 : விண்கலம் பயணிக்கும் சுற்றுப் பாதை தொலைவு 170 கி.மீ. x 4,313 கி.மீ-ஆக குறைப்பு.
  • ஆகஸ்ட் 9 : சுற்றுப் பாதை தொலைவு 174 கி.மீ. x 1,437 கி.மீ.-ஆக குறைப்பு.
  • ஆகஸ்ட் 14 : சந்திரயான்-3 விண்கலம் சுற்றி வரும் நிலவு வட்ட பாதைத் தொலைவு குறைந்தபட்சம் 150 கி.மீ.-ஆகவும், அதிகபட்சம் 177 கி.மீ-ஆகவும் மேலும் குறைக்கப்பட்டது.

  • ஆகஸ்ட் 17 : சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனில் இருந்து லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 20 : நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது.
  • ஆகஸ்ட் 21 : சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 23 : நிலவில் இன்று மாலை தரையிறங்குகிறது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.