ரயில் நிலையத்திற்குள் புகுந்த மழை நீரால் பயணிகள் சிரமம்!

ஈரோட்டில் பெய்த மழை காரணமாக ரயில் நிலையத்திற்குள் வெள்ளம் போல் புகுந்த மழைநீரால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

ஈரோட்டில் பெய்த மழை காரணமாக ரயில் நிலையத்திற்குள் வெள்ளம் போல் புகுந்த மழைநீரால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்தது.

அதன்படி  ஈரோடு மாநகரில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலை திடீரென லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது. பன்னீர்செல்வம் பூங்கா, பெருந்துறை சாலை, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு என மாநகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரமன நீடித்த இந்த மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின.

இதேபோல், ஈரோடு ரயில் நிலையத்தில், பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் டிக்கெட் புக்கிங் செய்யும் இடங்களில் மழைநீர் புகுந்ததால், ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.