முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

இந்தியாவில் பரவிய கொரோனாவை இப்படி வகைப்படுத்திய சுகாதார அமைப்பு!

கொரோனா தொற்றின் 2 வது அலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கவலையளிப்பதாகக் உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2 வது பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் 2 வது அலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்கிழக்கு பிராந்திய நாடுகளில் நாள்தோறும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் உயிரிழப்புகளும் கவலையளிப்பதாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு நாடும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை, உண்மையை மறைத்து குறைவாகவே வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார். உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனாவை, உலக சுகாதார நிறுவனம், ’சர்வதேச அளவில் கவலைக்குரிய திரிபு’ என வகைப்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகரிக்க உருமாறிய வைரஸ் மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது என்று கூறியுள்ள அவர், கொரோனாவால் மட்டுமே மக்கள் இறக்கவில்லை என்றும் பிற நோய்கள் காரணமாகவும் அவர்கள் இறந்துகொண்டிருப்பதாவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவில் முறைகேடுகள்: அமைச்சர் மூர்த்தி

Ezhilarasan

சராசரி மனிதனின் சாட்சியத்திற்கு சமமானது மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம்: சென்னை உயர்நீதிமன்றம்

Vandhana

கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தொடர்பான வழக்கு: சத்யபிரதா சாகு பதில் மனு

Vandhana