இந்தியர்கள் பலர் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துகொள்ள மாட்டு சாணம், கோமியத்தை உடலில் பூசிக்கொள்வது போன்ற நடவடிக்கையில் ஈடுப்படுகிறார்கள். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இதுபோன்ற செயல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என இந்திய மருத்தவ கழக தலைவர் ஜே.ஏ.ஜெயலால் கூறியுள்ளார்.
இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி தவித்துவருகிறது, இன்றளவில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 2,29,92,517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பலியானர்வகளின் எண்ணிக்கை 2,46,116 உள்ளது. இதன் விளைவாக மக்கள் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?
இந்நிலையில், குஜராத்தில் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் சிலர் வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் மற்றும் மாட்டின் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் கொரோனாவை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.
காலம் காலமாக ஹிந்துக்கள் மாடுகளை தெய்வமாகவும் மாட்டின் சாணத்தை மற்றும் கோமியத்தை கிருமி நாசினியாக தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குஜராத்தில் மக்கள் கொரோனாவிற்கு மருந்தாக மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்திய சம்பவம் குறித்து மருத்துவர் மக்களை எச்சரித்துள்ளார்.
“மாட்டு சாணத்திலோ அல்லது கோமியத்திலோ கொரோனாவை முறியடிக்கக்கூடிய எந்த விதமான மருத்துவ தன்மையும் இல்லை மேலும் இவை மருத்துவ ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ நிரூபிக்கப்படவில்லை என்றும், இவ்வாறாக செய்வதால் மேலும் வேறு நோய்கள் உருவாகக்கூடிய அபாயமும் உள்ளதாக” என இந்திய மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் உலக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த கவுதம் மணிலால் என்பர் கூறுகையில் “இங்கு மருத்துவர்கள் கூட வந்து இந்த முறையைச் செய்து செல்கின்றனர். இவ்வாறாக அவர்கள் செய்வதால் மருத்துவமனையில் அவர்கள் சந்திக்கும் நோயாளிகளிடம் இருந்து அவர்களுக்கு தொற்று ஏற்படாது என்பது அவர்களின் நம்பிக்கை” என்று கூறியுள்ளார்.
அறிவியல் சான்றுகள் இல்லை
மேலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றிலிருந்து மாட்டின் சாணத்தை உடலில் பூசி பிரார்த்தனை செய்ததால் மட்டுமே அவர் நோயிலிருந்து காப்பாற்றப்பட்டார் என்றும் கூறியுள்ளார். இவர் ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுல் விஸ்வவித்யா பிரதிஷ்டானம் என்ற இந்து துறவிகள் நடத்தி வரும் பள்ளியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“COVID-19 க்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக பசு அல்லது சிறுநீர் செயல்படுகிறது என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை, இது முற்றிலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது” என்று இந்திய மருத்துவ கழகத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறியிருக்கிறார்.







