நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!

பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ…

பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கொரோனா விதிமுறையைப் பின்பற்றாமல் நடுவானில் முகக்கவசத்தை கழற்றியுள்ளார். அவரை முகக்கவசம் அணி விமான ஊழியர்கள் கூறியபோது நடுவானில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் விமானம் கொல்கத்தா சென்றடைந்தவுடன் அந்த பயணி விமான காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் ஏசிய விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் மும்பை விமான நிலைய காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் விமான பயணிகள் யாரேனும் முகக்கவசம் அணிய மறுத்தால் அவர்களை விமானத்தில் ஏற்றக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.