எத்தனை கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை அதிமுகதான் முழுமையாக நிறைவேற்றும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது, இந்தியாவிலேயே ஏழு துறைகளில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்றவர் முதலமைச்சர் பழனிசாமி எனத் தெரிவித்தார். எத்தனை கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை அதிமுகதான் முழுமையாக நிறைவேற்றும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலகட்டத்தில் விவசாயிகள் பாதித்து இருப்பார்கள் என்பதனை கவனத்தில் கொண்டு, தேர்தலுக்கு முன்பாகவே கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்து வரலாறு படைத்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் மேலாண்மைக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களை முயற்சி செய்து நிறைவேற்றியதால் இந்தியாவே பாராட்டிய ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் எனவும் புகழாரம் சூட்டினார்.







