“தனது பணக்கார நண்பர்களுக்கு பாஜக வழங்கியதைவிட, இந்தியா கூட்டணி மக்களுக்கு அதிக தொகை வழங்கும்” – ராகுல்காந்தி உறுதி!

பாஜக தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியதை விட பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இந்தியா கூட்டணி அதிக தொகையை வழங்கும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள…

"India will give more to the people of the alliance than what the BJP has given to its rich friends" - Rahul Gandhi assures!

பாஜக தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியதை விட பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இந்தியா கூட்டணி அதிக தொகையை வழங்கும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி தீவிரமாக முயற்சிக்கிறது. அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற பாஜக முயற்சிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை (நவ.13) மற்றும் 20 ஆகிய இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல்காந்தி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று மையா சம்மான் யோஜனாவுக்கான நான்காவது தவணைத்தொகை ஜார்க்கண்ட் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தத் திட்டம் பெண்கள் விலைவாசி அதிகரிப்பை எதிர்த்து போராடுவதற்கும், சுயகவுரவத்தோடு வாழ்வதற்கும் உதவுகிறது. அதனால், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்க நாங்கள் முடிவுசெய்துள்ளோம்.

டிசம்பர் 2024 முதல் ஜார்க்கண்ட் மாநில பெண்களுக்கு ஊக்கத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 53 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர். நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். பாஜக தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியதை விட பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இந்தியா கூட்டணி அதிக தொகையை வழங்கும்” இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.