இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி ஏற்கனவே நடந்து முடிந்த ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா – வங்கதேசம் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று மிர்பூரில் இன்று தொடங்குகிறது. இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், கே.எல்.ராகுல் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த வங்கதேச அணி, 2வது போட்டியில் வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம், முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.








