காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது ;
NEET 2024: வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்படவில்லை,அமைச்சர் பதவி விலகவில்லை, CBI விசாரணை தொடங்கியது, ஒரு குழு அமைக்கப்பட்டது.
NEET 2026: வினாத்தாள் கசிந்தது, தேர்வு ரத்து செய்யப்பட்டது, அமைச்சர் இப்போதும் பதவி விலகவில்லை, CBI மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது, மற்றொரு குழு அமைக்கப்படவுள்ளது.
திரு. மோடி அவர்களே, நாடு உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறது – அவற்றுக்குப் பதிலளியுங்கள்! வினாத்தாள் கசிவுகள் ஏன் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன?
இந்த “வினாத்தாள் விவகாரம்” குறித்து நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப மௌனம் சாதிக்கிறீர்கள்? மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து வரும் கல்வி அமைச்சரை நீங்கள் ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




