ஒற்றுமையின்மையால் தோல்வி அடைந்தோம் – நாராயணசாமி பேட்டி…!

இந்தியா கூட்டணி, ஒற்றுமை இன்மையால் தோல்வியடைந்து உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது ;

மூன்று மாதங்களுக்கு முன் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் ஒற்றுமையின்மையால் தோல்வி அடைந்து விட்டோம். பணபலம், அதிகார பலத்தை வைத்து பாஜக-என்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கிறது. குறிப்பாக நீட் தேர்வு சாதாரண மக்களை புறக்கணிக்கிறது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள்கள் கசிந்து, மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. நீட் தேர்வு என்பதே தேவை இல்லாத ஒன்று. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும்

பிரெஞ்ச் மொழியை புதுவை மாணவர்கள் விரும்பி படிக்கிறார்கள். பிரெஞ்ச் மொழி புதுவை கலாச்சாரத்தோடு இணைந்தது. தமிழ் மொழியை பிரான்ஸ் நாட்டில் சொல்லி கொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.