ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று ஏற்பட்ட ஒரு மனிதரிடமிருந்து இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்க மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது எபோலாவின் அரிய வகை புண்டிபுக்யோ வைரஸ் என அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற அருகிலுள்ள நாடுகளுக்கும் இந்த நோய்ப் பரவும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் இதூரி மாகாணத்தில் பரவி வந்த எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







