முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் குறைந்தது கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலை, நாடு முழுவதும் தற்போது குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத் தும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறை வதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர்கொள் வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, இப் போது ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று, 22, 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று சற்று குறைந்திருக்கிறது.

தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 26,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். இதுவரை 3,31,21,247 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2,64,458 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 180 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,48,997 ஆக அதி கரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 90,79,32,861பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சினிமா பாணியில் கார் ஓட்டுநரை கடத்திய கும்பல்

Halley karthi

மேகதாது: கர்நாடகாவின் திட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு மனு

Gayathri Venkatesan

கேள்விக்குறியான மதுரை சித்திரை திருவிழா!

Niruban Chakkaaravarthi