முக்கியச் செய்திகள் தமிழகம்

கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்தியமைச்சர் எல்.முருகன்

கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் நமது நாடு உலகிலேயே முதல் நாடாக திகழ்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் அடுத்த லத்துவாடியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு கால்நடை பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவ கல்லூரியில் நாமக்கல் புதிய பால் பண்ணைதொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியமைச்சர் எல்.முருகன், நாமக்கல்லில் ரூ.89 கோடி மதிப்பீட்டில் புதிய பால்பண்ணை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள். மேலும் ராஷ்ட்ரிய கோகுல் மெஷின் திட்டத்தின் மூலம் இந்தியாவில் நாட்டு பசு மாடுகள் வளர்க்க மத்திய அரசு நாட்டு பசு அபிவிருத்தி செய்ய 53 ஆயிரம் கோடி ரூபாயும், தேசிய கால்நடை இயக்கம் மூலம் கோழி, ஆடு, பன்றி வளர்ப்பு தொழிலுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மீன்வளத்தை பொருத்தவரை 2014 ஆண்டுக்கு முன்பு 3 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே அதில் முதலீடு செய்யப்பட்டன. ஆனால் பாரத பிரதமர் பொறுப்பேற்ற பிறகு, அத்துறையை மேம்படுத்திட, நீலப் புரட்சி திட்டத்தை அறிவித்து 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

தேசிய மீன்வள வாரியத்தில் 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மட்டும் 1800 கோடி வழங்கப்படுகிறது, இதனைக் கொண்டு 14 பணிகள் திருவள்ளூர், திருவொற்றியூர் நாகப்பட்டினம், விழுப்புரம் இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துதல் மீன் சந்தைகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

PMMSY திட்டத்தில் நாளை இரண்டாம் ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். இத்திட்டத்தில் முதலில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு கடந்த 8 ஆண்டுகளில் 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் நமது நாடு உலகிலேயே முதல் நாடாக திகழ்கிறது. கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்திலும் கூட இப்பொருட்களின் ஏற்றுமதி 32 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்ததுபோல, கொச்சின், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், மேற்குவங்கம் ( பெட்டுவா காட்) 5 மீன்பிடி துறைமுகங்கள் தலா 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் காசிமேடு மீன் துறைமுகம் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படும். கடல்பாசி தொழில் மேம்படுத்த 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமேஸ்வரத்தில் திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கடலோர மீன்வளம் மட்டுமல்லாது, பிரான் ஏற்றுமதி, உள்நாட்டு மீன் இனங்கள், மீன் வளர்ப்பு நிலையங்கள், தீவன ஆலைகள் மானியம் வழங்குதல் உள்ளிட்டவை PMSSY திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா

Halley Karthik

இபிஎஸ் அறிக்கைக்கு அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன்

Web Editor

இந்தி தேசிய மொழியா? ஜொமேட்டோவுக்கு எதிராக களமிறங்கிய தமிழ்நாடு எம்பிக்கள்

G SaravanaKumar