அதிகரிக்கும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம்!

நாட்டில் 18 மாநிலங்களில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது கொரோனா அலை தொடங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்…

நாட்டில் 18 மாநிலங்களில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது கொரோனா அலை தொடங்கியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53,476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் முதன் முறையாக ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் உயர்ந்த கொரோனா பாதிப்பு இதுவாகும். நாட்டில் இதுவரை1.17 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா நோய்த் தொற்றால் நாட்டில் இதுவரை 10,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இங்கிலாந்து உருமாறிய கொரோனாவால் 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேருக்கு தென்னாப்பிரிக்க கொரோனாவாலும், பிரேசில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


உருமாறிய கொரோனா வைரஸின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ள பத்து தேசிய ஆய்வகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நாட்டில் 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, சத்தீஸ்கர், சண்டிகர் போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 11-ம் தேதியிலிருந்து நேற்றுவரை 3,12,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 1,636 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய தீவிரப்படுத்தியுள்ளது. 60-45 வயது வரையுள்ள இணை நோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவந்த நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது.
இந்தியாவில் இதுவரை 5.21 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் தகவலின் படி 5,21,97,380 தடுப்பூசிகள் போடுவதற்காக விநியோகிக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.