தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக தலைவருமான எல்.முருகனை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக தாராபுரம் நகர் பகுதியில் வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய காயத்ரி ரகுராம், சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரை ரயில் திட்டம் மற்றும் அரசு கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தர நடவடிக்கைகளை எல். முருகன் எடுப்பார் எனக்கூறினார்.







