45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து காப்பற்றிக்கொள்ள பல வழிமுறைகளை மத்திய அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய நாளில் மட்டும் இந்திய அளவில் 43,000 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் ” 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இனை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏப்ரல் 1ம் தேதி முதல் இது நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். தகுதியான அனைவரும், பதிவு செய்தபின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.