இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72,330 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் நாட்டின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,22,21,665- ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களின் 78.56 சதவீதமாக உள்ளது. இவர்களில் 56,211 பேருக்கு புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது
மகாராஷ்டிராவில்கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் 28 ஆம் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,579 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு வரும் 30-ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.




