‘மகுடம்’ பட டீசர் இன்று வெளியீடு

விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘மகுடம்’. இப்படம் முதல் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்டது. அனால் கருத்த வேறுபாடுகளால் அவர் விலக விஷாலே இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசைமைக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபபடுகிறது.

இந்த சூழலில் மகுடம் படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவினால் அது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை மகுடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று நடிகர் விஷால் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.