தாதா சாகேப் பால்கே விருது: தனது பேருந்து ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினி!

இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்திக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு திரைத்துறையில் தனது ஆரம்பம் பயணம் முதல் தற்போதுவரை தன்னை ஊக்குவித்துவரும் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த்…

இந்திய திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்திக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு திரைத்துறையில் தனது ஆரம்பம் பயணம் முதல் தற்போதுவரை தன்னை ஊக்குவித்துவரும் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.

இந்திய திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரையுலகில் மிகச் சிறந்த பங்களிப்பைத் தந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாதா சாகேப் பால்கே வழங்கப்பட்டதிற்கு நடிகர் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டார். அதில், இந்திய திரையுலகின் மிகய உயரிய தாதா சேகேப் பால்கே விருது, தமக்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியினை தெரிவித்தார்.

மேலும், அவரிடம் இருந்த நடிப்பு திறமையை கண்டுப்பிடித்து ஊக்குவித்த பேருந்து ஓட்டுநரான அவர் நண்பர் ராஜ் பகதூருக்கும், அவர் அண்ணன் சத்யநாராயணா ராவிற்கும், திரைவுலகில் தன்னை அறிமுகம் செய்த அவர் குருநாதராக கருதும் மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் வளர்ச்சிக்கு உருதுணையாக இருந்து வரும் திரைத்துறை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், குறிப்பாக ரசிகர்களுக்கும் இந்த விருதினை சமர்பிப்பதாக அவர் தெரிவித்தார். இந்த விருது வழங்கப்பட்டதிற்கு வாழ்த்துகள் தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் திறைத்துறை பிரபலங்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியினையும் தெரிவித்து கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.