கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: மாநிலங்களுக்கு உத்தரவு!

ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நாட்களிலும் கூட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல்…

ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நாட்களிலும் கூட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் தொடங்கியது. இதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வாழ்க்கையும் முற்றிலும் முடங்கியது. கொரோனா வைரஸை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

முதற்கட்டமாக நாடு முழுவதும் ஜனவரி மாதம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் உள்பட நாட்டிலுள்ள முக்கிய பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோன தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அரசு விடுமுறைகளிலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.