முட்டை விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

நாமக்கல்லில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ஒரேநாளில் ரூ.20 காசுகள் குறைந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 22ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ஒரே நாளில் அதிரடியாக 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ .5.60 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று நவம்பர் 21ம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.80 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.20 காசுகள் குறைந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பண்டிகைகள் மற்றும் விரத நாட்கள் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது அதனால் விலையும் நாளுக்கு நாள் முட்டை விலையும் குறைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் காரணமாக அங்கிருந்த பண்ணைகளில் கோழிகள் அளிக்கப்பட்டது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை அதிகமாக தேக்கம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை நாளுக்கு நாள் குறைக்கப்பட்டு வருவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் தரப்பிலும் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.