முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மின்வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மின்வாரியம் அறிவிப்பு

மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும் போது, பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 31 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதமாக உயர்ந்து 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி அமல்படுத்தப்படும் என்றும், செப்டம்பர் 2022 மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இம்மாதத்தின் ஊதியத்துடன் இணைத்து அக்டோபர் மாதம் பணமில்லா பரிவர்த்தனை முறையான தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அனுமதிக்கத்தக்க உயர்த்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியைக் கணக்கிடுகையில் ஒரு ரூபாய்க்கும் குறைவாக வரக்கூடிய தொகை, அதாவது 50 காசும் அதற்கு மேல் இருக்குமாயின் அதனை அடுத்த ஒரு ரூபாயாக கனக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுவே 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அறிவிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழுநேர பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.4,100 – 12,500 பெறும் பணியாளர்களுக்கும் அனுமதிக்கத்தக்கது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூர்யா 41 படத்தின் புதிய அப்டேட்

Vel Prasanth

வடகொரியாவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது – கிம் ஜாங் உன்

Jeba Arul Robinson

வனவிலங்கு குற்றவியல் நிலுவை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக்கோரிய வழக்கு; பிப். தள்ளி வைப்பு!

Niruban Chakkaaravarthi