தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை, ஈரோடு, கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

சென்னை, ஈரோடு, கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டுமான நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதே போல் CMK Projects Pvt Ltd நிறுவனத்திலும், அந் நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்து கட்டி கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சென்னை அண்ணாநகர் ஏகே பிளாக் 10வது மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. 

கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது. கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவரது இல்லத்திலும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்டு ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. 

கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் 100க்கும் மேற்பட்ட  இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.