திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை: 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்திய பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் கடந்த 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்தியுள்ளனர். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது.  பகல்பத்து,…

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் கடந்த 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்தியுள்ளனர்.

மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது.  பகல்பத்து, ராபத்து, இயற்பா என மொத்தம் 21 நாள்கள் இந்த விழா நடைபெறும்.  இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளான மோகினி அலங்காரம் நடைபெற்ற  சொர்க்கவாசல் திறப்பு டிச.23-ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:  தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் புதிய சக்தியை பெறுகிறேன் | பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருமலைக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள்  வருகை தந்தனர்.  சொர்க்க வாசல் திறந்திருக்கும் நாட்கள் நேற்றுடன் நிறைவு பெறுகிறது.  இதனைத்தொடர்ந்து,   இன்று (ஜன.2) திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசன், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி ஆகிய 3 இடங்களில் உள்ள கவுன்டர்கள் திறக்கப்பட்டு, இந்த கவுன்டர்கள் மூலம் மீண்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10 நாள்களில் சொர்க்கவாசல் வழியாக 6.43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 40.18 கோடி காணிக்கையை செலுத்தியுள்ளனர்.  இவர்களில் 2.13 லட்சம் பக்தர்கள் வேண்டுதலுக்காக மொட்டையடித்து தலைமுடி காணிக்கையும் செலுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.