மலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 200 பேர் காயம்!

மலேசியாவில் மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் என்ற இரட்டை கோபுரம் மிகவும் பிரபலமான ஒன்று. இங்குள்ள மெட்ரோ சுரங்கப் பாதையில்…

மலேசியாவில் மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் என்ற இரட்டை கோபுரம் மிகவும் பிரபலமான ஒன்று. இங்குள்ள மெட்ரோ சுரங்கப் பாதையில் 213 பயணிகளுடன் மெட்ரோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் இருந்து காலியான ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. இரண்டுm ஒரே பாதையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த ரயில்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேராக மோதின. மோதிய வேகத்தில் பலத்த காயமடைந்த பயணிகள் அலறினர். சில பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

’இந்த விபத்தில் 47 பயணிகள் படுகாயமடைந்தனர். 166 பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று போலீஸ் அதிகாரி முகமது ஜைனல் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

’23 வருடமாக இயங்கி வரும் மலேசியா மெட்ரோ அமைப்பில் இப்படியொரு விபத்து நடப்பது இதுதான் முதன் முறை. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது’ என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியாங் தெரிவித்துள்ளார்.

’வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே விபத்து நடந்துவிட்டது. பயங்கரமாக சத்தம் கேட்ட அடுத்த நிமிடமே, நின்ற இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் நான் பறந்தேன். பலர் அழும் சத்தம் கேட்டது. இது அதிர்ச்சியான விபத்துதான்’ என்று தெரிவித்திருக்கிறார், விபத்தில் காயமடைந்த ஆனந்த் ராஜ் என்பவர். மனித தவறால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மலேசியாவில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.