விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. செல்லா அய்யாவு இயக்கி இருந்த இப்படத்தில் கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஸ்ரீஜா ரவி, கஜராஜ், நிகிலா சங்கர், ஹரீஷ் பேரடி, அஜய் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்த இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இப்படம் 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது.
கட்டா குஸ்தி திரைப்படத்தின் 2 பாகம் தற்போது உருவாகியுள்ளது. இயக்குனர் செல்லா அய்யாவு இயக்க முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி , முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் புதிதாக இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், மோக்ஷா , யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கட்டா குஸ்தி 2 படத்தின் ‘சம்பவக்காரி’ பாடல் வெளியாகியுள்ளது. சீன் ரோல்டன், இசையமைத்துள்ள இப்பாடலுக்கு அவருடன் இணைந்து சைந்தவி பாடியுள்ளார்.




