பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சுருக்கமாக பிஎஸ்.என்.எல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. பி.எஸ்.எம்.எல். அவ்வப்போது முறையான அறிவிப்புகள் முலம் தகுதியானவர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கிறது.
இந்த நிலையில் காலியாக டெலிகாம் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப பிஎஸ்.என்.எல். அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி,
பணியிடங்கள்
- நாடுமுழுவதும் மொத்தம் 100 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- இதில் தமிழ் நாட்டில் 1 இடம் உள்ளது.
கல்வித் தகுதி :
- பொறியியலில் இளங்கலை (B.E.) பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- தொலைத்தொடர்பு, மின்னணுவியல், வானொலி தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கருவியியல் அல்லது மின்னணுவியலில் முதுநிலை அறிவியல் பட்டம் (M.Sc. Electronics), கணினி அறிவியலில் முதுநிலை அறிவியல் பட்டம் (M.Sc. Computer Science)பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- 03.07.2026 தேதிப்படி 20 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- எஸ்சி/எஸ்டி, ஓபிசி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
சம்பளம் விவரம்:
- மாதம் ரூ.16,400 – 40,500/-வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
- கணினி வழியிலான தேர்வு நடைபெறும், ஆப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இடம் பெற்று இருக்கும். 3 மணி நேரத்திற்கு இந்த தேர்வு நடைபெறும். தேர்வில் உரிய கட் ஆப் பெறும் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவேண்டும். விண்னப்ப கட்டணமாக ரூ.2000 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.1000 கட்டணம் ஆகும்.
முக்கிய தேதிகள்
| விண்ணப்பம் தொடக்க தேதி | 04.06.2026 |
| விண்ணப்பம் நிறைவு | 03.07.2026 |
| விண்ணப்பத் திருத்தம் தொடக்கம் | 04.07.2026 |
| விண்ணப்பத் திருத்தம் நிறைவு | 11.07.2026 |
| தேர்வு | ஆகஸ்ட் 2026 |
மேலும் விவரங்களுக்கு பி.எஸ்.எம்.எல். நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வலைதலமான https://bsnlregistration.ibtexamination.com/AppO2 பார்க்கவும்.




