முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள் சினிமா

’தடுப்பூசி போட்டு 6 நாளாச்சு… ஊசி குத்துன இடத்துல…’ நடிகர் சூரி ட்வீட்!

தான் தடுப்பூசி போட்டு ஆறு நாட்களாகிவிட்டது என்றும் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் கொரோனா 2 வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றில் இருந்து மக்களை காக்க, மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தொற்று காரணமாக மருத்துவமனை செல்பவர்கள், படுக்கை வசதி கிடைக்காமலும் ஆக்சிஜன் கிடைக்காமலும் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசிதான் ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். நடிகர், நடிகைகளும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் சூரி, தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசி போட்டு ஆறு நாளாச்சு; எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல்சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு, இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

திங்கள் முதல் டெல்லி மெட்ரோ ரயில், பேருந்துகளில் 100% பயணிகள் அனுமதி

Vandhana

என்ன நடக்கிறது லெபனானில்?

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

Vandhana