கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 1,400 குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலிருந்து, தற்போது உள்ள இரண்டாவது அலை வரை…

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 1,400 குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையிலிருந்து, தற்போது உள்ள இரண்டாவது அலை வரை இந்த பெருந்தொற்றால் 1,400 குழந்தைகள், தங்கள் தாய், தந்தையில் ஒருவர் அல்லது அவர்களின் பெற்றோரையே இழந்து அனாதையாகியுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தெரிவித்துள்ளது. அதில் சென்ற ஆண்டு மட்டும் 50 குழந்தைகளின் பெற்றோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ள சிறுவர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதுபோன்று கொரோனா பேரிடர் காலத்தில் பசி, வறுமையால் உயிரிழந்தவர்கள் மற்றும் உயிரிழப்பு கொண்டவர்கள் என இவ்வாறு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் அரசால் அறிவிக்கப்படவில்லை. மேலும் அதற்கான எவ்வித முயற்சிகளும் இதுவரை அரசு எடுக்கப்படவில்லை எனத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்தியா முழுவதும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021 ஜூன் 5ஆம் தேதிவரை சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் தாய், தந்தையில் ஒருவர் அல்லது பெற்றோரையே இழந்து அவர்கள் அனாதையாகியிருப்பதாகத் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

அதில் 802 மரணங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நோய்த்தொற்று பாதிக்காமல் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்காதவர்களும் அடங்குவர் எனத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை முழுமையாகக் கணக்கிட்டுத் தெரியப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்றோரை இழந்துவாடும் சிறுவர்களை உள்ளூர் அதிகாரிகள் ஆகியோரால் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உதவிகளை சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.