மத்திய அரசை “பாரத பேரரசு” என்றே அழைப்போம் என நடிகை குஷ்பு ட்வீட் செய்திருப்பது தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைத்தால், நாம் பாரத பேரரசு என்று அழைப்போம், என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.







