இன்றைய வானிலை நிலவரப்படி தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் 12 இடங்களில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மற்றும் கரூர் பரமத்தி பகுதியில் 106 டிகிரி ஃபாரன்டிட் வெயில் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தும் என்பதும், பல நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் இருக்கும் என்பது வழக்கம். அந்தவகையில்,பஞ்சாப் ஹரியானா மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோயம்புத்தூர்-100.76
- தர்மபுரி -102.38
- ஈரோடு -105 .08
- கரூர் பரமத்தி -106.7
- மதுரை நகரம் -102.92
- மதுரை விமானநிலையம்-102.2
- சேலம் -106.16
- தஞ்சாவூர் – 100.4
- திருச்சி -103.82
- திருப்பத்தூர் -103.28
- திருத்தணி- 102.56
- வேலூர் -104.54
இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலத்தின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.








