சென்னை சூளைமேடு பகுதியில் போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
சூளைமேடு பகுதியை சேர்ந்த சத்யராஜ், நேற்று இரவு அவரது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருவரையும் பிரீத் அனலைசர் கருவி மூலம் சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், இருவரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, சத்யராஜ் அவருடைய மனைவி அக்ஷயாவை தொலைபேசி மூலம் அழைக்க, அவர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கிருந்த உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் காவலர்களை மிரட்டியதுடன், காவலர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.
இது குறித்து காவலர் அளித்த புகாரின் பேரில், சத்யராஜ், அக்ஷயா மற்றும் வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







