பசு வதையை நிறுத்தினால், உலகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளும் மறைந்துவிடும் என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து சட்டவிரோதமாக மாடுகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு, குஜராத்தின் டபி மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி சமீர் வினோத்சந்திர வியாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, “பசுவின் இரத்தம் துளிகூட பூமியில் சிந்தக்கூடாது. அப்போதுதான் இந்த உலகத்தில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தீரும். பசுக்கள் அழிந்தால் இந்த பிரபஞ்சமே இல்லாமல் போய்விடும். மாட்டுச் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவதில்லை என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது. கெளமுத்ரா எனப்படும் மாட்டின் சிறுநீர், பல தீராத நோய்களுக்கு மருந்தாகும்.
பசு, மதத்தின் சின்னம். பசுக்கள் எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அங்கு செல்வம் பெருகும். பசுக்கள் துன்புறுத்தப்படும் இடத்தில், அதற்கு நேர்மாறாக நடக்கும். பசு, ருத்ராவின் தாய், வாசுவின் மகள், அதிதிபுத்திரரின் சகோதரி.
பசு ஒரு விலங்கு மட்டுமல்ல. அது நமது தாய் போன்றது. பசுவைப் போல நன்றியுள்ளவர்கள் யாரும் இல்லை. எனவே, அத்தகைய நன்றியுணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும். பசு 68 கோடி புண்ணிய தலங்களும், 33 கோடி கடவுள்களும் வாழும் கிரகம்” என்று குறிப்பிட்டார்.