ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர் யுவராஜாவை திர்த்து காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்தார். தற்போது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், ஜி.கே.வாசன் அதிமுகவுக்கு ஆதரவாக இடைத்தேர்தலில் பணியாற்ற தேர்தல் பணிக்குழு ஒன்றை நியமித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெற இருகின்ற இந்த இடைத்தேர்தலில் த.மா.கா – அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றுகிறது.எனவே த.மா.கா சார்பில் தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகளாக விஜயகுமார், ஆறுமுகம், விடியல் சேகர், யுவராஜா, சந்திரசேகர், கெளதமன், சண்முகம், பிரகாஷ் ஜெயின், மணியன், சம்பத்குமார், சின்னுசாமி, சுந்தரசாமி, உழவன் கொற்றவேல், புவனேஸ்வரன், ரபீக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.