”ஆளுநர் தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால்  தமிழ்நாட்டில் நடமாட முடியாது”-முத்தரசன் பேட்டி

ஆளுநர் தன் போக்கினை மாற்றி கொள்ளாவிட்டால்  தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ரவியை…

ஆளுநர் தன் போக்கினை மாற்றி கொள்ளாவிட்டால்  தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ரவியை கண்டித்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்  முத்தரசன்  தெரிவித்ததாவது.

அண்மைச் செய்தி : சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- கமல்ஹாசன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக செயல்படுத்தி வருகிறார். அவர் சனாதான கொள்கைகளை பின்பற்றி தமிழகத்தை சீரழிக்க முயற்சிக்கிறார்

ஆளுநர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் அவர் எங்கும்
நடமாட முடியாது.  மாமேதை காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்த ஆளுநர் ரவியை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து இவ்வாறு ஆளுநர் பேசி வந்தால் தமிழகத்தில் எங்கும் நடமாட முடியாது.

இதையும் படிக்கவும்: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது: திமுக கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்  முத்தரசன்  தெரிவித்தார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.