நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி உட்பட 14 பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2004 – 2009க்கு இடைப்பட்ட காலத்தில், காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது , ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயில் முறைகேடாக ஆட்சேர்ப்பு மற்றும் நிலத்திற்குப் பதிலாக வேலை வழங்குவதாக
சொல்லி மோசடி என பல குற்றங்களை அவர் செய்ததாக கூறி லாலு பிரசாத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு , எப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் வழக்கில் ஆதாரங்கள் கிடைத்த பிறகு லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி, மத்திய ரயில்வே முன்னாள் பொது மேலாளர் சௌமியா ராகவன், ரயில்வேயின் முன்னாள் சிபிஓ கமல் தீப் மைன்ராய் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக நியமிக்கப்பட்ட 7 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இது தவிர, இவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறையும் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இரண்டு வழக்குகளிலும் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்ளிட்டோர் நீதிமன்றம் நாடியதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் தற்போது, லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்ட 14 பேருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி வரும் மார்ச் 15-ம் தேதி. தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா