பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை, அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுக்கும் தமிழக அரசை கண்டித்தும், 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மறுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், திமுகவினர் தங்களை எதிர்ப்பதை வரவேற்பதாக கூறினார். மேலும், ஆர்ப்பாட்டத்தின் மூலம் தங்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்தார். மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க, மாநில அரசு உரிய அழுத்தத்தை, மத்திய அரசிற்கு தர வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.







