சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்ற 17 வயது சிறுவனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக காலையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் பசுபதி என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கும் சிறுவன் சீனிவாசன் கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.








