தமிழ்நாடு அரசுக்கு சீமான் கேள்வி

சுவரொட்டிகளுக்கு தடை விதிப்பதால் மட்டுமே சிங்காரச் சென்னையை உருவாக்கிவிட முடியுமா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்,…

சுவரொட்டிகளுக்கு தடை விதிப்பதால் மட்டுமே சிங்காரச் சென்னையை உருவாக்கிவிட முடியுமா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா, மாயோன் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மறைக்கப்பட்ட தமிழின அடையாளங்களை, மூதாதையர்களை நினைவூட்டும் வகையில் அவர்களது இறந்த நாளை தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டி கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சுவரொட்டிகள் ஒட்டுவதால், சிங்காரச் சென்னையின் அழகு கெட்டுவிடுவதாகக் கூறி, தமிழ்நாடு அரசு அதற்கு தடை விதித்துள்ளது. ஆனால், வழி நெடுகிலும் ஆளுங்கட்சியின் சுவரொட்டிகள் அதிக அளவில் காணப்படுவதாக குற்றம் சாட்டினார். நெகிழி தாள்களுக்கு மாற்று கொண்டு வராமல் அதனை தடை செய்துவிட்டால் சிங்காரச் சென்னையை எப்படி உருவாக்க முடியும் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.