திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை.வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், பாஜக எதிர்க்கட்சியாக உள்ளதால் திமுகவை விமர்சனம் செய்கிறது. திமுகவை எதிர்க்கவில்லை என்றால் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாரத்திற்கு ஒரு முறை திமுகவை பாஜக குறை சொல்லி வருகின்றது. 10 மாதங்களாக
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பான ஆட்சி வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் நலனுக்காக வெளிநாட்டு பயணம் செய்துள்ள நிலையில், அதனை பாஜக கொச்சைப்படுத்தி பேசி வருகிறது.
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது பாலியல் விவகாரங்களில் கண்ணை கட்டி கொண்டு இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் பாலியல் விவகாரங்களில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தொடந்து பேசிய அவர், மதிமுகவை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எப்ரல் 1 ம் தேதி முதல் அமைப்பு ரீதியான தேர்தல் நடத்த உள்ளோம். தமிழ்நாடு முழுதும் உறுப்பினர்கள் சேர்க்கவும் இளைஞர்களை மதிமுகவில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் செய்து மதிமுகவின் பலம், பலவீனம் குறித்து கருத்து கேட்க உள்ளேன் என்றேன்.