புதின் குறித்த பைடனின் கருத்து: வெள்ளை மாளிகை திடீர் மறுப்பு

புதின் குறித்த அதிபர் பைடன் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மற்றும் நேட்டோ…

புதின் குறித்த அதிபர் பைடன் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க மற்றும் நேட்டோ படை வீரர்கள் மத்தியில் உரையாற்றியானர். அப்போது பேசிய பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்று தெரிவித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், பைடன் பேச்சு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், புதின் குறித்த அதிபர் பைடனின் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதின் தனது அண்டை நாடுகளின் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது என்றே அதிபர் பைடன் கூறியதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ரஷ்யாவில் புதினின் அதிகாரம் குறித்தோ அல்லது ஆட்சி மாற்றம் பற்றியோ அவர் விவாதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.