அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உபரி பேராசிரியர்களின் பணி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிதிநிலை சரியில்லாததால், 370 பேரை மீண்டும் திரும்பப்பெற முடியாது என்று உயர்கல்வித்துறைக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே 4 ஆண்டுகால பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட 370 பேராசிரியர்கள் பிற உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: “திமுகவை எதிர்க்கவில்லையெனில் அண்ணாமலை பதவியில் நீடிக்க முடியாது – துரை.வைகோ”
பிற அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 370 உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். 370 பேரும் தற்போது பணியாற்றி வரும் பிற கல்லூரிகளிலேயே அடுத்த 3 ஆண்டு காலத்துக்கும் பணியாற்றிட வேண்டும் என உத்தரவிட்டுள்ள உயர்கல்வித்துறை செயலாளர், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.