தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்கள் தொடரும் பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, விஷச்சாரய மரண விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, உள்ளிட்டவற்றை
கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தவிர அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திமுக அரசிற்கு எதிராகவும் முதலமைச்சர் பதவி விலக கோரியும், அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
இந்த ஆர்ப்பாடங்களுக்கு ஏற்பாடு செய்து பங்கேற்ற நிர்வாகிகளுக்கும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்நாட்டில் ஊழல்களும், மக்கள் விரோத செயல்களும் தொடரும் பட்சத்தில் அதிமுகவின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.