அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டேவன்போர்ட் பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே கட்டடம் இடியும்போது எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
நாங்கள் எங்களது மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நாங்கள் மீட்போம்” என்று டேவன்போர்ட் தீயணைப்புத்துறை தலைவர் மைக் கார்ல்ஸ்டன் தெரிவித்துள்ளார். டேவன்போர்ட் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.